Home » Amma’s Writings in Tamil

Amma’s Writings in Tamil

Nectar Drops...
Pure thoughts make man God. Impure thoughts make him atheist.

சொந்தமாக கொண்டதெல்லாம்
பாதம் ஒன்றுதான் –
சொத்தாக சேர்த்ததெல்லாம் – நின்
நாமம் ஒன்று தான்

மறக்க முடியா நினைவால்
மயங்குவதும் ஏனோ?

துறக்க இயலா பந்தத்தால் – நீ
தொடர்வதும் ஏனோ?

கருடக் கொடியானே – என்
கதறல்கள் உனக்கு தாலாட்டோ?

என் கண்ணீரின் பெருக்கு
உன் மேனி நீராட்டோ?

கருணையும் இல்லையோ?
சாயீஸ்வரா! சாயீஸ்வரா! சத்ய சாயீஸ்வரா!

பெரிது பெரிதெனில் உலகமே பெரிது
அதனினும் பெரிது அண்ட கோளங்கள்
அதனினும் பெரிது ஆதித்ய தேவன்
அதனினும் பெரிது அகிலப்பிரபஞ்சம்
அதனினும் பெரிது பிரபஞ்சம்
தாங்கும் ஆதிமூலம் திருவடிகள்
அதனினும் பெரிது திருவடி தாங்கும்
என் நெஞ்சகமன்றோ?
என் பெருமான் திருவடி இருக்கும்
என் இதயக் கமலமன்றோ அனைத்திலும் பெரிது!

உன்னிடத்தில் என் உள்ளம்
உறவாடும் போது
உலகத்தில் வேறு இன்பம் தான் ஏது?

என்வினை தீர்க்க உனக்கின்னும் மனமில்லையோ…

என் விடுதலைக்கு வழி சொல்ல இடமில்லையோ…

உன் கூட்டத்தில் எனைசேர்க்க வினைத்தொல்லையோ…

கூடாத நட்புக்கு இது எல்லையோ?

என் பிரேம நெஞ்சம் அறியாயோ?

அது பேசும் மொழி நீ புரியாயோ?

நின் காதல் நெஞ்சம் தாராயோ?

அதில் கருணைத் துளிகளைச் சேராயோ?

நீ எங்கே என் நினைவுகள் அங்கே

நீ ஒருநாள் வரும் வரையில் – நான்

இருப்பேன் இந்த உடல் உறையில்